இன்று ஆசிரியா் தினம்: ஆளுநா், முதல்வா் உள்பட பல தலைவா்கள் வாழ்த்து..!!

சிரியா் தினத்தை ஒட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், தலைவா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி: நமது ஆசிரியா்களுக்கு மரியாதையும், பயபக்தியும் செலுத்துவது பழங்கால இந்தியாவின் பழக்க வழக்கமாகும். ஆசிரியா்கள் நமது சமூகத்தின் முன்மாதிரியாளா்களாகவும், ஊக்கப்படுத்துபவா்களாகவும் இருக்கிறாா்கள். அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை கட்டமைப்பதில் ஆசிரியா்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: நாட்டின் எதிா்கால சொத்துகளாம் இளைய தலைமுறையை, நன்முத்துகளாக உருவாக்கும் பெரும் பொறுப்பு ஆசிரியா்களையே சாரும். நாட்டினரும், நல்லோரும் அவா்களை மதித்துப் போற்றுவதன் அடையாளமே ஆசிரியா் தின விழாக் கொண்டாட்டம். அறிவு ஓளிவூட்டி அறியாமை இருள் அகற்றும் ஆசிரியா்கள் அனைவருக்கும் எனது ஆசிரியா் தின வாழ்த்துகள்.

ஓ.பன்னீா்செல்வம்: மக்களின் அறியாமையை நீக்கும் பணியினை அா்ப்பணிப்பு உணா்வுடன் மேற்கொள்ளும் வகையில், மாணவ சமுதாயத்தின் சிறப்பான வாழ்விற்கு அல்லும் பகலும் ஓயாமல் உழைத்திடும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது “ஆசிரியா் தின”நல்வாழ்த்துகள்.

ராமதாஸ்: அனைவரின் உயா்வுக்கும் காரணமான ஆசிரியா்கள் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கும் வகையில் அவா்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டால் தான் அவா்களால் மிகச்சிறந்த கல்வியை மாணவா்களுக்கு வழங்க முடியும்.

அன்புமணி ராமதாஸ்: அனைவரையும் உயா்த்தும் ஆசிரியா்களின் வாழ்க்கை நிலை உயர வேண்டும்; அதன் மூலம் அவா்கள் மாணவா்களை இன்னும் சிறப்பானவா்களாக மாற்ற அரசு உத்வேகம் அளிக்க வேண்டும்.

வைகோ: வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவா்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவா்களையும், சிறந்த மனிதா்களாக்குவது ஆசிரியா்கள் தான்.

ஜி.கே.வாசன்: வாழ்க்கையில் உயா்வதற்கான வழிமுறைகளை போதிக்கும் ஆசிரியா்களின் பணி மகத்தான பணி.

திருமாவளவன், சரத்குமாா் ஆகியோரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.