விநாயகர் சதுர்த்தி… கோவையில் 676 சிலைகள் வைக்க அனுமதி..!

கோவை : விநாயகர் சதுர்த்திவிழாவையொட்டி கோவை மாநகரில், 676 சிலைகள் வைக்க அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வரும் 18ம் தேதி, சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.இதற்காக இந்து அமைப்புகள், பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இதை அமைதியாக நடத்துவது குறித்து இந்து-மற்றும் இஸ்லாமிய அமைப்பினருடன், கடந்த சில நாட்களுக்கு முன், போலீஸ்கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினர்.இதையடுத்து, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி, கோவை மாநகரில் 676, விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.கவுண்டம்பாளையம், துடியலுார், வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன்கள் மாநகரில் இணைக்கப்பட்டுள்ளதால், 160 சிலைகள் கூடுதலாக பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.தற்போதே இந்து அமைப்புகள், விநாயகர் சிலைகளை வாங்கி செல்ல தொடங்கி உள்ளனர். அந்த சிலைகளுக்கு, போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.