துர்நாற்றத்துடன் குப்பை மேடாக காட்சியளிக்கும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை – வீடியோ இதோ.!!

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் துர்நாற்றம் குப்பை மேடாக காட்சியளிக்கும்
அவலம்..

நோயால் பாதிக்கப்படும் பொதுமக்கள் மருத்துவமனைக்கு சென்று நோய் நிவாரணம் பெற செல்லும் மருத்துவமனையிலேயே நோய் பரவும் அபாயம் கண்டு பொதுமக்கள் மிகவும் கவலைப்படுவதாக கூறினார்கள். அரசு மருத்துவமனை வளாகத்தில் வரும் குப்பைகளை சுமார் ஐந்து நாட்களுக்கு மேல் பிளாஸ்டிக் கவருகளில் குவியலாக தேக்கமடைய வைத்து பிறகு எடுக்கப்படுகிறது
இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்ற அடிப்பதாகவும் பல நோய் கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் பொதுமக்கள் அச்சமடைந்து வருகிறார்கள் . குப்பைகளை தேக்கமடையாமல் தினசரி சுத்தம் செய்தால் சுகாதாரம் காக்கப்படும் என்றும் பொதுமக்கள் கருத்தினை தெரிவித்தனர்.

அதேபோல் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணாஜி ராவ் ரோடு அரசு மருத்துவமனை சுற்று சுவர் அருகே பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு வார்டு மிக நெருக்கத்தில் உள்ள கழிவுநீர் சாக்கடை வாய்க்கால் சாலை மட்டத்திற்கு நிரம்பி உள்ளது. இதில் துர்நாற்றம் வீசுகிறது.  இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் தற்போது நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் பாதிக்க வாய்ப்பு உள்ளது .இதே போன்று மேட்டுப்பாளையம் ராமப்ப ரோடு உள்ளிட்ட பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை போன்ற பகுதிகளிலும் குப்பை மேடுகளாகவும் கழிவுகளும் நிறைந்துள்ளது .நோயாளிகளும் பள்ளி மாணவிகளும் அதிகம் பயன்படுத்தும் இப்பகுதியை போர்க்கால அடிப்படையில் தூய்மைப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என அப்பகுதி வியாபாரிகள் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்..