விநாயகர் சதுர்த்தி விழா : அமைச்சர், மேயர் பங்கேற்பு..!

தூத்துக்குடி புதிய பஸ்நிலைய நுழைவுவாயிலை ஒட்டியுள்ள ஸ்ரீ போத்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நடைபெற்ற பூஜைகளில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன், ராஜா, அசோக் மற்றும் திமுக மாநகர செயலாளர் எஸ்.ஆர். ஆனந்தசேகரன் மாநகராட்சி கவுன்சிலர் கீதாமுருகேசன், சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கோட்டுராஜா உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பூஜைகளை தொடர்ந்து அன்னதானத்தை அமைச்சர் மற்றும் மேயர் தொடங்கி வைத்தனர்.