தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இரண்டு தொகுதிகளிலும் வருகிற 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.திமுகவை பொறுத்தவரை கனிமொழி, ஆ.ராசா, உதயநிதி ஸ்டாலின், மு க ஸ்டாலின் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். அதேபோல், எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தனர்.
நேற்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தாராபுரத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது தவெக ஆட்சியையும், முதல்வர் விஜயையும் காட்சி அவர் கடுமையாக விமர்சித்து பேசினார். தவெகவை பொறுத்தவரை முதலமைச்சர் ஜோசப் விஜய் ஏற்கனவே நேரில் சென்று பிரச்சாரம் செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்கிற நிலை இருக்கிறது.ஏற்கனவே, மதுராந்தகத்திலும், தாராபுரத்திலும் பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய் நேற்று மதுராந்தகத்தில் ரோட் ஷோ நடத்தினார். மாமண்டூர் தொடங்கி மதுராந்தகம் வரை 35 ஊர்கள் வழியாக அவர் ரோட் ஷோ நடத்தி மக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.
இந்நிலையில்தான், அக்டோபர் 4ம் தேதியான நாளை தாராபுரத்தில் விஜய் ரோட் ஷோ செய்ய திட்டமிட்டிருக்கிறார். 114 கிலோ மீட்டர் பயணித்து 23 இடங்களில் அவர் வாக்குகள் சேகரிக்கிறார். இதற்காக புறநகர் பகுதிகளிலும், பிரதான சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் உள்ள சாலைகளின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது .







