இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக பங்கேற்பு!

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக பங்கேற்றுள்ளது. எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட மமதா பானர்ஜி தரப்பு திரிணமூல் காங்கிரசும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி போராட்டங்கள் நடத்துவது பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இந்தியா கூட்டணி கூட்டியுள்ள ஆலோசனை கூட்டத்தில் முதல்முறையாக தவெக பங்கேற்றுள்ளது. தவெக சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வைகோ, திருமாவளவன், ஐயூஎம்எல் பொதுச்செயலாளர் அபுபக்கர், சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.