கோவையில் பைக் மீது வேன் மோதி விபத்து: வாலிபர் பலி -ஒருவர் படுகாயம்..

கோவை புலியகுளம், துல்லா ஆறுமுகம் வீதியை சேர்ந்தவர் நல்லசாமி.இவரது மகன் நாச்சிமுத்து (வயது 28) இருவரும் அதே பகுதியை சேர்ந்த சுரேன்ராஜ் ( வயது 28 )இருவரும் பைக்கில் நேற்று தொண்டாமுத்தூர்- கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தனர் .பூச்சியூர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு வேன் இவர்கள் சென்று பைக் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் .அங்கு சிகிச்சை அளிக்காமல் நாச்சிமுத்து இறந்தார். சுரேன் ராஜ்சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டதுடன் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை விசாரணை நடத்தினார். பண்ருட்டியை சேர்ந்த ஈச்சர் வேன்டிரைவர் பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.