கோவையில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்..!

கோவை மதுக்கரை நகராட்சிக்குட்பட்ட 4வது வார்டு ( கோவைபுதூர் திட்டபகுதி) அறிவொளி நகர், காமராஜ் நகர், சமத்துவநகர் பகுதியில் கடந்த 30 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதை கண்டித்து பொதுமக்கள் மைல்கல் பகுதியில் இன்று சாலை மறியல் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டினார்கள்.இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குடிசை மாற்று வாரியம் சார்பில் குனியமுத்தூர், ஆத்துப்பாலம் , சுண்ணாம்பு காலவாய்,குறிச்சி பிரிவில் இருந்து கடந்த ஒன்றரை வருடம் முன்பு குடிமற்றம் செய்யபட்டவர்களுக்கு கடந்த ஒரு வருடமாகவே குடிநீர் சரிவர வழங்கப்படாததை கண்டித்தும், கடந்த 30 நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்தும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.