கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் மாதாந்திர நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் நகராட்சி ஆணையாளர் ரகுராமன், நகர்மன்ற துணைத்தலைவர் செந்தில் குமார் முன்னிலையில் இன்று நடைபெற்றது . இக்கூட்டத்தில் கடந்த மூன்றான்று காலமாக தெருவிளக்கு பிரச்சனை அனைத்து வார்டு பகுதிகளிலும் இருந்து வருவதாகவும் அதேபோல பல்வேறு பணிகள் குறித்தும் மன்றத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டும் ஓரிரு பணிகள் மட்டுமே செய்து வருவதாகவும் இதனால் வார்டு பகுதி மக்கள் நகர் மன்ற உறுப்பினர்களை பல்வேறு கோணங்களில் கேள்விகள் கேட்டு நோகடிப்பதாகவும் நகர்மன்ற உறுப்பினர்கள் தெரிவித்த நிலையில் 15 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் தெருவிளக்கு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எடுத்துக் கூறி காரசார விவாதத்தில் ஈடுபட்டார் . இதனால் நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்ப்பட்டது .இந்நிலையில் தெருவிளக்கு பிரச்சனைகளுக்கு தீர்வு காண 21 வார்டு பகுதிகளுக்கும் சுமார் 210 சோலார் மின்விளக்குகள் அமைக்க ரூ.44 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் அதற்கான நிதி ஒதுக்கிடு செய்யவும், ஏற்கனவே மின்மயானம் அமைக்க முடிவு செய்யப்பட்ட ரொட்டிக்கடைபகுதியில் அப்பகுதி பொதுமக்களின் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அந்த மின்மயானத்தை 12 வது வார்டு பகுதியான கருமலை எஸ்டேட் பகுதியில் அமைக்கவும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது..