கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் 50 வயது தொழிலாளி . இவர் கான்கிரீட் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவியும் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார் .இந்த நிலையில் மனைவி வேலைக்கு சென்ற நேரத்தில் பெற்ற மகள் என்றும் கூட பார்க்காமல் கட்டிட தொழிலாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் கடந்த 20 21ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் கூறி அழுதாள். உடனே அந்த தொழிலாளி மீது பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனைவி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கட்டிடத் தொழிலாளியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது .இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ 5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.