காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றிய காதலன் கைது..!

கோவை சவுரிபாளையம், உப்பிலிபாளையம் மெயின் ரோட்டில் உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மகள் சிவசங்கரி (வயது 21)இவர் உப்பிலிபாளையத்தில் உள்ள கார் ஷோரூமில் வரவேற்பாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளாக சுங்கம் காந்தி நகரை சேர்ந்த மோகன் மகன் ஜெயப்பிரகாஷ் ( வயது 22 ) என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் பல தடவை உல்லாசமாக இருந்துள்ளனர்.இதனால் சிவசங்கரி கர்ப்பமானார். கருவை கலைக்குமாறு ஜெயப்பிரகாஷ் சிவசங்கரிடம் வற்புறுத்தினார்.  இந்த நிலையில் சிவசங்கரி  உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டில் வசிக்கும் ஜெயப்பிரகாசின் வீட்டுக்குச் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். அப்போது ஜெயபிரகாஷ் உன்னை திருமணம் செய்ய முடியாது என்று கூறி ஜாதி பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதற்கு அவரது தயார் ஜோதியும் உடந்தியாக இருந்ததாக கூறப்படுகிறது.. இது குறித்து சிவசங்கரி மேற்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி ஜெயப்பிரகாஷ் (வயது 22) அவரது தாயார் ஜோதி ஆகியோர் மீது ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக ஜெயப்பிரகாசை நேற்று கைது செய்தனர் . அவரது தாயார் ஜோதியை தேடி வருகிறார்கள்..