ரஷ்யா மீது புதிதாக 500 தடைகள் விதித்தது அமெரிக்கா – நவால்னியின் மரணத்திற்கு பதிலடி..!!

உக்ரைன் போர் மற்றும் நவல்னியின் மரணத்தை அடுத்து, ரஷ்யாவின் மீது அமெரிக்கா உலக வரலாற்றில் மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பதாக அதிபர் ஜோ பிடன் அறிவித்தார்.

இது ரஷ்ய பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று அறிவித்த புடின், தனது ஆக்கிரமிப்புக்கு மிகப்பெரிய விலை கொடுப்பதை உறுதி செய்வதற்காக ரஷ்யாவிற்கு எதிராக 500 தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ள்ளார்.

ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் அண்மையில் மரணமடைந்தார்.. ரஷ்ய அதிபர் புடினை கடுமையாக எதிர்த்து வந்த அவர் சிறை தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது திடீரென மரணமடைந்தது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இப்போது அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் காயங்கள் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில் இந்த பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை “போர் இயந்திரம்” (war machine) என்று அழைக்கும் அமெரித்த அதிபர், போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவுக்கு தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும், “அலெக்ஸி நவால்னியின் (Alexei Navalny) சிறைவாசத்துடன் தொடர்புடைய நபர்களை” இலக்காகக் கொண்ட பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் புடின் அறிவித்தார்.

ரஷ்யாவிற்கு எதிராக 500க்கும் மேற்பட்ட பொருளாதார தடைகளை நேற்று (2024 பிப்ரவரி 23 வெள்ளிக்கிழமை) அமெரிக்கா அறிவித்தது. உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் அறிவிக்கப்பட்ட இந்தத் தடைகள், ரஷ்ய அரசை எதிர்த்துவந்த அலெக்ஸி நவால்னி இறந்த பிறகு விதிக்கப்பட்ட தடைகள் ஆகும்.