வடகோவை பகுதியில் அடையாளம் தெரியாத நபர் கொலை
கோவை மேட்டுப்பாளையம் சாலை வடகோவை மெயின் ரோட்டை ஒட்டி தனியார் கட்டிடத்தில் புரனமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்கட்டிடத்தின் கீழ் அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆர்
எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் சாலையோரங்களில் வசித்து வந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Leave a Reply