2 பசு மாடுகளை அடித்து கொன்ற புலி – கூடலூர் மக்கள் பீதி..!

???? ?????????????? ???????

கூடலூர் அருகே நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெல்வியூ பகுதியை
சேர்ந்தவர் மாரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் தனது
கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டார்.
அப்போது எஸ்டேட் பகுதியில் மறைந்திருந்த புலி பசுமாட்டை தாக்கி கொன்றது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது
தொடர்பாக நடுவட்டம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில்
மாரியின் மற்றொரு பசு மாட்டை நேற்று மதியம் புலி தாக்கி கொன்றது. இதனால்
தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து
தகவல் அறிந்த நடுவட்டம் வனத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு
செய்தனர்.அப்போது புலி தாக்கி 2 பசு மாடுகள் பலியானது தொடர்பாக உரிய
இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
மருத்துவ சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்தவுடன் உரிய நடவடிக்கை
எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதி அளித்தனர். தொடர்ந்து தோட்ட
தொழிலாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அப்பகுதியில் நடமாடும்
புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புலி நடமாட்ட
பீதியால் அப்பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது