கோவை மாநகர காவல்துறையை ஏமாற்றமுயற்சிக்கும் போஸ்டர்பத்திரிக்கை விளம்பரம். போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை…

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:- கோவை மாநகரில்அனுமதி பெறாமல் அரசு அலுவலக சுவர்கள், மேம்பாலங்கள்,உள்ளிட்ட பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என்று மாநகராட்சி மற்றும் மாநகர காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.இதை மீறி கடந்த 27ஆம் தேதி கோவை மாநகர பகுதிகளில் அனுமதி இல்லாமல் அரசுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்கள் என அனைத்து இடங்களிலும்,”கோவை மெயில்” என்ற வாராந்திரபத்திரிகையின் சுவரொட்டி ஒட்டியதாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் ஒரு வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை மாநகர பகுதியில் “இரவில் உதிக்கும் சூரியன்” என்ற பெயரில் கோவை மாநகர காவல்துறை ஆணையரின் படத்துடன் மீண்டும் அனைத்து இடங்களிலும் அதேவார பத்திரிக்கை பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.பத்திரிக்கைக்கு மட்டும் அனுமதி பெறாமல் சுவர்களில் போஸ்டர் ஒட்ட உத்தரவு பிறபிக்கபட்டுள்ளதா? ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்ட குற்றவாளி எப்படி? வழக்கு பதிவு செய்யபட்ட நிறுவனம் காவல்துறை அதிகாரிக்கு வாழ்த்து தெரிவித்து இது போன்ற போஸ்டர்களை அனைத்து சுவர்களிலும் ஒட்டியுள்ளது.. இது மாநகர காவல் ஆணையரிடம்அனுமதி பெறாமல்ஒட்டி உள்ளதாக கருதுகிறோம். இதுபோன்ற சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சமூக விரோதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்டத்தின் முன் அனைவரும் சமம்.எனவே கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை மாநகராட்சி,கோவை மாநகர காவல் துறையினரும் இதுபோன்ற போஸ்டர் கலாச்சாரம் நடத்திபிழைப்புநடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.போஸ்டர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கோவையில் முழு அமைதி நிலவும் இந்த நாட்களில் போஸ்டர்கள் ஒட்டி பிரச்சனைகளை உருவாக்கும் கலாச்சாரம்ஒழிக்கப்பட வேண்டும்என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இருப்பினும் நமது கோவைக்கு கிடைத்த ஒரு நேர்மையான காவல்துறை ஆணையருக்கு “முகஸ்துதி “செய்து, குழி பறிக்கும் இதுபோன்ற சுயநல வியாபார கும்பல்கள் இனிமேல் இது போன்று செய்யாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த நிலை நீடித்தால் இதேபோல மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், மாநகராட்சி ஆணையருக்கும் இதே போல விரைவில் போஸ்டர் ஓட்டுவார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.இவ்வாறு கூறியுள்ளார்.இந்த நிலையில் போலீஸ் கமிஷனரின் அனுமதி பெறாமல் அவரது படத்தை வெளியிட்ட போஸ்டர் பத்திரிக்கைக்குபோலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.