கோவை ஒண்டிபுதூர், தெப்ப கவுண்டர் வீதியை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் ( வயது 57) ஜோதிடர். இவர் மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதனால் இவர் குடிப்பழக்கத்திற்கு ஆளானா.ர் மேலும் அவர் முகத்தில் கீழ் தாடை இல்லாததால் மனக்கவலையில் இருந்து வந்தார் .இந்த நிலையில் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. உடனே வீட்டின் உரிமையாளர் சென்று பார்த்த போது ஆனந்த கிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது .இது குறித்து சிங்காநல்லூர் போலீசில்புகார் செய்யப்பட்டது. போலீசார்சம்பவ இடத்தில் சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தூக்கு போட்டு ஜோதிடர் தற்கொலை…








