ஆட்டோவில் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது..!

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் ஆர்.எஸ்.புரம், பூ மார்க்கெட் பகுதியில் கண்காணிக்க சென்ற போது வெரைட்டி ஹால் ரோடு சந்திப்பு அருகில் பயணிகள் ஆட்டோவில் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருந்த திருவிழாமலை திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்ற பெண்ணை விசாரணை செய்த போது தமிழக அரசால் வழங்கப்பட்ட பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசிகளை அப்பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி ரயில்கள் மூலம் கேரளா மாநிலம் ஒத்த பாலத்தில் கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார். அவருக்கு உடந்தையாக இருந்த குறிச்சி ஹவுசிங் யூனிட் சிட்கோ பகுதியைச் சேர்ந்த பத்ருதீன் என்பவரிடம் இருந்து தலா 20 கிலோ வீதம் 10 ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றி அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய  சிறையில் அடைத்தனர்.