வால்பாறையில் பழங்குடியின மக்கள் தின விழா பாரம்பரிய நடனத்துடன் கொண்டாட்டம்..!!

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காடம்பாறை, கல்லார் குடி, உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின மக்கள் அனைவரின் நலன் கருதி வால்பாறை நகராட்சி திருமண மண்டபத்தில் பழங்குடியின மக்கள் தினவிழா நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் பாலு, நகராட்சி மேலாளர் ஜலாலுதீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முன்னதாக கேக்வெட்டி மலைக்கிராம மக்களின் பாரம்பரிய நடனத்துடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு அனைவருக்கும் விருந்து வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியின் போது மலைகிராமப்பகுதிகளில் சாலைவசதி, மற்றும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்ய அதற்க்கான அங்காடி வசதிகள் செய்து கொடுக்கவும் கோரிக்கை விடுத்தனர். மேலும் பழங்குடியின மக்கள் தின விழா என்பதை எதிர்பாராத வகையில் விழா மூலம் சிறப்பித்து மனம் குளிரச் செய்த அனைவருக்கும் சமூக ஒருங்கிணைப்பாளர் வாசுகிக்கும் பழங்குடியின மக்கள் தின விழாவில் கலந்து கொண்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்..