கோவை அருகே உள்ள சேரன்மா நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் .இவரது மனைவி வினுதா (வயது 41) சுய தொழில் செய்து வந்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் சுங்கம் ராமநாதபுரம் பார்க் டவுன் பகுதியில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ. 36 லட்சத்து 60 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இதற்காக ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் வட்டியாக மட்டும் கொடுத்துள்ளார் .மேலும் 10 செக்குகள் பிராமசரி நோட்டு ( ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார் .இந்த நிலையில் பைனான்ஸ் அதிபர் பழனியப்பன் அபிராமி ஆகியோர் வினோதாவிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டினார்களாம். இதுகுறித்து வினுதா ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் பைனான்ஸ் அதிபர் பழனியப்பன், அபிராமி ஆகியோர் மீது கந்துவட்டி தடுப்புச் சட்டம் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து விசாரணை பெறுகிறார்கள்.