ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கோவைக்கு கஞ்சா சாக்லெட் சப்ளை. பிடிக்க தனிப்படை விரைவு.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி.
கோவை: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களில் 60 கிலோ கஞ்சா ,45 கிலோ சாக்லெட் மற்றும் ஏராளமான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணையில் கஞ்சா சாக்லெட் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் போதை மாத்திரை உத்தரபிரதேச மாநிலம் காசிபாத், ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருந்தும் கோவைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது தெரிய வந்தது .எனவே கஞ்சா மொத்த வியாபாரிகளை பிடிக்க 3தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆந்திரா ராஜஸ்தான், உத்திர பிரதேசம் ஆகிய வெளி மாநிலங்களுக்கு சென்று உள்ளனர். கஞ்சாவியாபாரிகள்கைது செய்யப்படுவார்கள். ஏற்கனவே கைதானவர்களிடம் இனிமேல் கஞ்சாவிற்கமாட்டோம் என்று பிணைப்பத்திரம் வாங்கப்பட்டு வருகிறது. இது தவிர பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகிகளுடன் இணைந்து மாணவர்களிடையே போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். போதைப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. கஞ்சா மட்டும் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளித்து மீட்க கலெக்டரின் முயற்சியால் அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது’ அங்கு போதைக்கு அடிமையானவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது..கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் போலீசருக்கான மனமகிழ் மன்றம், குழந்தைகள் காப்பகம், நூலகம் ஆகியவற்றை மாநகர போலீஸ் கமிஷனர் திறந்து வைத்தார் .பின்னர் அவர் போலீசாரின் குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கினார் .அப்போது அவர் போலீசாருடன் சிறிது கேரம் மற்றும் செஸ் விளையாடி மகிழ்ந்தார். அந்த வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார். இதில் ஆயுதப்படை துணைக் கமிஷனர் முரளிதரன், உதவி கமிஷனர் சேகர் இன்ஸ்பெக்டர் பிரதாப் சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்..