பிறந்து 38 நாட்களே ஆன பெண் குழந்தை திடீர் சாவு – போலீசார் விசாரணை..

கோவை பீளமேடு ,ராமசாமி லேஅவுட்டை சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மனைவி லட்சுமி (வயது 33).அங்குள்ள ரேணுகா தேவி கோவிலில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு பிறந்து 38 நாட்களே ஆன பெண் குழந்தை உள்ளது.நேற்று பால் குடித்துவிட்டு குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் குழந்தை இறந்துவிட்டது .இது குறித்து லட்சுமி பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.