வால்பாறையில் வணிகர்கள் இன்று கடையடைப்பு – பொது மக்கள் பாதிப்பு ..!

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் உணர் திறன் வரைவு மசோதாவால் சுமார் 183 கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார பாதிப்புக்கள் ஏற்படுவதை தடுக்கவும் அந்த மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வால்பாறை மக்கள் உரிமை மீட்பு குழு மற்றும் அனைத்து தரப்பினர் சார்பாக வணிகர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முதற்கட்டமாக உணவு விடுதி, தங்கும் விடுதி முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது . மேலும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் வழக்கம்போல ஓடினாலும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்..