பயணிகளின் கவனத்திற்கு… கோவை ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்..!

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறும் போது:-

மேற்கு ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதை ஒட்டி கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் திருப்பத்தூர், பங்காருபேட்டை வழியாக ராஜ்கோட்டுக்கு இயக்கப்பட்டு வந்த வாராந்திர எக்ஸ்ப்ரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

கோவையில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் 5 மணி நேரம் தாமதமாக காலை 5 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதே போல் தொட்டம்பட்டி ரயில் நிலையத்தில் திருப்பூர், மொரப்பூர் இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே நாளை ஆலப்புழா தன்பாத் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் திருவனந்தபுரம் மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் நாளை 20 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.