விலங்குலகின் பேரன்பு: குட்டி கீழே விழுந்துவிடக் கூடாது என பாசத்துடன் தூக்கிச் செல்லும் தாய் பூனை.
விலங்குகளின் தாய் பாசம் என்பது மனிதர்களுக்கு இணையானது, சில சமயங்களில் அதைவிடவும் மேலானது என்பதை உணர்த்தும் பல சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது இணையவாசிகளின் இதயங்களை நெகிழச் செய்துள்ள மற்றுமொறு ஒரு செய்தி இதோ .
தங்குவதற்குப் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகரும் ஒரு தாய் பூனை, தன் குட்டி உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்துவிடக் கூடாது என்ற பெரும் தவிப்போடும் பாசத்தோடும் அதைத் தூக்கிச் செல்லும் காட்சிகள் பார்ப்போரைக் கண் கலங்க வைக்கின்றன.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு தாய் பூனை தனது சிறிய குட்டியை வாயில் கவ்வியபடி மிகக் கவனமாகப் பயணிக்கிறது. ஆபத்தான அல்லது உயரமான பகுதிகளில் இருந்து குட்டி தவறி விழுந்துவிடக் கூடாது என்பதற்காக, அது தன் முழு கவனத்தையும் செலுத்தி, குட்டியின் கழுத்துப் பகுதி தோலை மென்மையாகக் கவ்விப் பிடித்துச் செல்கிறது.
இயற்கையாகவே, தாய் பூனை இவ்வாறு கவ்விப் பிடிக்கும் போது குட்டிகள் எந்தவித அசைவும் இன்றி, அமைதியாகத் தன் கால்களை மடக்கிக் கொள்கின்றன. இதனால் குட்டிக்கு எந்த வலியும் இன்றி மிக லாவகமாக தாய் பூனையால் அதை ஆபத்தான இடங்களிலிருந்து மீட்டுச் செல்ல முடிகிறது.
“அன்பிற்கும் பாசத்திற்கும் மொழியோ, வடிவமோ இல்லை. விலங்குலகின் இந்த நிபந்தனையற்ற அன்பு மனிதர்களுக்குப் பேரவசியம்” . இந்தத் தாய் பூனையின் அர்ப்பணிப்பு உணர்வு, தற்போதைய இணைய உலகின் ஆகச்சிறந்த அன்பின் அடையாளமாக மாறியுள்ளது.







