நகை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல்- சாப்ட்வேர் இன்ஜினியர் மீது பெண் புகார்..!

கோவை :தேனி மாவட்டம் ,ஓடை பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் தயானந்த் ( வயது 39 ) இவர் சரவணம்பட்டியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 36) இவர்கள் கோவை கெம்பட்டி காலனியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2குழந்தைகள் உள்ளனர்.இவர் தனது மனைவியிடம் 30 பவுன் நகையை வாங்கி அடகு வைத்து கடன் வாங்கினாராம்.அந்த நகையை திருப்பி கொடுக்கவில்லை.தற்போது நிலம் வாங்க மேலும் 12 பவுன் நகையை கேட்டாராம். அதற்கு ராஜலட்சுமி மறுத்து விட்டார். இதனால் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு லண்டன் சென்று விட்டார்.இது குறித்து ராஜலட்சுமி கோவை மேற்கு பகுதி அனைத்து மகளீர் போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் தெய்வமணி விசாரணை நடத்தி ராஜலட்சுமியின் கணவர் தயானந்த் மீதுகொலை மிரட்டல், வரதட்சணை கொடுமை, நம்பிக்கை மோசடி ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.