கோவை அலுவலகத்தில் வழக்கறிஞர் திடீர் மரணம் ..

கோவை அருகே உள்ள போத்தனூர் செட்டிபாளையம் விக்னேஷ் பார்க் பகுதியில் வசிப்பவர் பிரபு ஆறுமுகம் (வயது 70) வழக்கறிஞர்.இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலம் ,மைசூர் நஞ்சன்கோடு.இவர் செட்டிபாளையத்தில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இவர் காந்திபுரம் 3 -வது கிராசில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அலுவலகம் நடத்தி வந்தார். நேற்று இவர் அலுவலகத்தில் மயங்கி கிடந்தார் .அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார் வழக்கறிஞர் பிரபு ஆறுமுகம் மாரடைப்பால் இறந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காட்டூர் இன்ஸ்பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.