செம்மண் கடத்தல் – 7 பேர் கைது..!

கோவை அருகே உள்ள ஆலந்துறை பகுதிகளில் சட்ட விரோதமாக செம்மண் வெட்டி கடத்தப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து ஆலாந்துறை போலீசார் கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில் ஆலந்துறை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செம்மண் வெட்டி எடுக்க அனுமதி கொடுத்தது தொடர்பாக நிலத்தின் உரிமையாளர்களான விராலியூர் சுந்தரமூர்த்தி (வயது 65) இந்திரா காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சுதாகரன் (வயது 29) ஆகியோர்நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் செம்மண் வெட்டி கடத்தியதாக டிப்பர் லாரி டிரைவர்களான ஆலந்துறை ஹை ஸ்கூல் புதூரை சேர்ந்த தினகரன் ( வயது 34) இருட்டு பள்ளம் நாகராஜ் ( வயது 50 )குப்பனூர் பால்ராஜ் (வயது 40) சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த ரவி (வயது 38) திண்டுக்கல் மாவட்டம், காளப்பட்டியைச் சேர்ந்த பூபதி (வயது 24) ஆகிய 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்..