கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய கொள்ளையன் பிடிபட்டான்..!

கோவை பெரிய கடை வீதியில் அருள்மிகு கோனியம்மன் கோவில் உள்ளது.கோவையின் காவல் தெய்வமாக பக்தர்களால் அழைக்கப்படக்கூடிய இந்த கோவிலில் கடந்த 13-ந்தேதி இரவில் யாரோ மர்ம ஆசாமிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து கோவிலின் மேல்புறம் உள்ள ஆதி கோனியம்மன் கோவில் முன் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்று விட்டனர். இது குறித்து உக்கடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.உண்டியல் கொள்ளையனை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சிவனு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் தீவிரமாக துப்பு துலக்கி வந்தனர் .அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிந்திருந்தது .அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் உண்டியலை உடைத்து பணம் திருடியதாக திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையத்தைச் சேர்ந்த சேகர் என்ற சதீஷ் ( வயது 32 )என்பவரை நேற்று கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.