தோழிக்கு பிறந்த நாள் கேக் கொடுக்கச் சென்ற 10ம் வகுப்பு மாணவி எங்கோ மாயம்..!

கோவை சுந்தராபுரம் குறிச்சி காந்திஜி ரோட்டை சேர்ந்தவர் ராஜாராம். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 15) குனியமுத்தூர் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது பிறந்த நாள். கேக் வெட்டிவிட்டு தோழி சகானா வீட்டுக்கு சாக்லேட் கொடுப்பதற்காக தனது தந்தையுடன் சென்றார்.தனது தந்தையிடம் தோழி வீட்டில் இருந்துவிட்டு மாலையில் வருகிறேன் என்று கூறினார் .இதனால் அவரது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார் .மாலையில் பிரியதர்ஷினி வீட்டுக்கு வரவில்லை..தோழி வீட்டிலும் இல்லை. எங்கோ மாயமாகி விட்டார். இது குறித்து போத்தனூர் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..