இரவோடு இரவாக 15 கி.மீ. பயணித்த அரிசி கொம்பன்- கும்கி அனுப்ப வனத்துறையினர் ஏற்பாடு.!!

இரவு முழுவதும் அங்கேயே இருக்கும் என வனத் துறையினர் கணித்து இருந்த வேளையில், இரவு 12 மணி அளவில் சுமார் 15 கிலோ மீட்டர் நடந்தே பயணித்து சுருளி அருவி செல்லும் சாலையில் தனியார் தோட்டத்திற்கு சென்றது.

இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தாம்பாறை பகுதிகளில் உயிர் பலி வாங்கிய அரிசி கொம்பன் என்ற ஒன்றை யானை கேரள வனத் துறையால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. யானையின் கழுத்தில் சாட்லைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு தமிழக – கேரள எல்லை பகுதியான தேக்கடி பெரியாறு புலிகள் காப்ப பகுதியில் விடப்பட்டது. அங்கு இருந்து இடம்பெயர்ந்த அரிசி கொம்பன் யானை மேகமலை ஹைவேவிஸ் பகுதியில் கடந்த 2 வாரங்களாக சுற்றித் திரிந்தது.

இந்நிலையில் அரிசி கொம்பன் யானை மேகமலையில் இருந்து இறங்கி இரவோடு இரவாக லோயர்கேம்ப் பகுதிக்கு வந்தது. லோயர்கேம்பில் இருந்து கம்பம் நகர் பகுதிக்குள் வந்தது. ஒரு நாள் முழுவதும் கெஞ்சியகுளம் அருகே உள்ள புளியந் தோப்பில் இருந்தது.

இதை அடுத்து இளைஞர் ஒருவர் ட்ரோன் மூலம் வீடியோ எடுக்க முயன்ற போது பதற்றம் அடைந்த யானை அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வாழை தோப்பில் புகுந்தது.

இரவு முழுவதும் அங்கேயே இருக்கும் என வனத் துறையினர் கணித்து இருந்த வேளையில், இரவு 12 மணி அளவில் சுமார் 15 கிலோ மீட்டர் நடந்தே பயணித்து சுருளி அருவி செல்லும் சாலையில் தனியார் தோட்டத்திற்கு சென்றது. இதற்கிடையே பொள்ளாச்சி அருகே டாப் சிலிப்பில் இருந்து சுயம்பு என்ற கும்கி யானை, அரிசி கொம்பனை வனப் பகுதிக்குள் விரட்டுவதற்காக அழைத்து வரப்பட்டு உள்ளது.