மூதாட்டி வாயில் பிளாஸ்திரியால் ஒட்டி 10 பவுன் நகை திருட்டு – கோவையில் மர்ம நபர் கைவரிசை..!

கோவை வேலாண்டிபாளையம் கொண்ட சாமி நாயுடு, 3 -வது வீதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கல்யாணி (வயது 71 இவர் தனது மகன் குமாருடன் வசித்து வருகிறார் வீட்டின் முதல் தளத்தில் மகன் வசிக்கிறார் .கல்யாணி தரைத்தளத்தில் உள்ள வீட்டில் தங்கி உள்ளார் .நேற்று இவர் வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கிவிட்டார் .அப்போது ஒரு ஆசாமி உள்ளே புகுந்து கல்யாணியின் வாயை பிளாஸ்திரியால் ஒட்டி அவர் அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டான் .இது குறித்து கல்யாணி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரெஜினா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் .அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள. வீடு புகுந்து மூதாட்டியிடம் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.