சிறுவாணி அணையின் நீர்மட்டம் 23 அடியாக குறைந்தது.!!

கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி நீர்மட்டம் 23 அடியாக சரிந்தது .இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:கோவை மாநகரில் உள்ள 30 வார்டுகளுக்கும் வழியோரங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் சிறுவாணி அணையில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் அணையில் அதிகபட்சம் 32 அடி தண்ணீர் தான் இருந்தது .தற்போது கடும் வெயில் வாட்டி வருவதால் சிறுவாணி அணியின் நீர்மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 23 அடியாக உள்ளது. அணையில் இருந்து தினமும் 3 கோடி லிட்ட ர் ( 30எம். எல். டி)குடிநீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது .சிறுவாணி அணையின் நீர்மட்டம் குறைந்தாலும் பில்லூர் 3 – வது கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால் கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது.இவ்வாறு அவர் கூறினார்.