கோவையில் இருந்து வேன் ஒன்று, நேற்று காலை பல்லடம் நோக்கி வந்தது.கரடிவாவி, கே.அய்யம்பாளையம் ரோட்டில் வந்தபோது வேனின் பின்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோடு ஒர புதரில் கவிழ்ந்தது. உடனே டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.வேனில், 2.5 டன் ரேஷன் அரிசி இருந்தது. இந்த சம்பவம் குறித்துஅப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.விசாரணையில், கோவையில் இருந்து வேனில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டதும், அதிக பாரம் காரணமாக டயர் வெடித்ததால், வேன் விபத்துக்குள்ளானதும் தெரியவந்தது. வேன் மற்றும் அரிசியை பறிமுதல் செய்து, தப்பிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரிகளும் அங்கு வந்து விசாரித்தனர். வாகனத்தில், தனியாரிடம் இருந்து அரிசி வாங்கி செல்வது போன்ற போலி ரசீது இருந்துள்ளது. சோதனைச்சாவடிகளில் காட்டுவதற்கு இதைப் பயன்படுத்தியுள்ளனர்.
ரேஷன் அரிசி கடத்திய வேன் புதரில் கவிழ்ந்து விபத்து- டிரைவர் தப்பி ஓட்டம்..!








