கோவை வெள்ளலூர் அருகே உள்ள மகாலிங்கபுரம்,.சதீஸ்வரர் நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகள் மதுமிதா வயது 20 இவர் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். .கடந்த 17ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற மதுமிதா வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார் .இதுகுறித்து அவரது தந்தை புருஷோத்தமன் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
இதே போல திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து இவரது மகள் நந்தினி ( வயது 25) டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவதற்காக கோவை 100 அடி ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஐ.ஏ.எஸ்.அகாடமியில் படித்து வந்தார்.இதற்காக கோவை அவிநாசி ரோட்டில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் ஊருக்கும் செல்லவில்லை. விடுதிக்கும் திரும்பி வரவில்லை அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து தாயார் வீரம்மாள் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.