பெண்ணின் இடுப்பை கிள்ளிய வாலிபருக்கு தர்ம அடி..!

கோவை சூலூர்பக்கம் உள்ள காடம்பாடி ,ஐஸ்வர்யா கார்டனை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி சுகந்தி (வயது 23) இவர் அங்குள்ள குமாரபாளையம் பிரிவில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.நேற்று இவர் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் .அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி திடீரென்று இறங்கி அவரது இடுப்பை கிள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றார்.உடனே சுகந்தி சத்தம் போட்டார். அக்கம் பக்கம் ஓடி வந்து அந்த ஆசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்து சூலூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர் .விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (வயது 27) என்பது தெரியவந்தது. இவர் தற்போது சோமனூர் பாரதிநகரில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார் இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டமமான பங்கம் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர் நீதிமன்றத்தில் ராஜபடுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.