வழக்கமாக மார்ச் மாதம் முடிந்து ஏப்ரல் மாதத்தில் இருந்து வெயில் தொடங்கும். பின்னர் மே மாதத்தில் உச்சநிலையை எட்டி பின்னர் படிப்படியாக குறையும்.
மற்ற காலங்களிலும் வெப்பம் நிலவுவது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தாண்டு தற்போதே கோடை வெயில்போன்று வெப்பம் தொடங்கியுள்ளது.
தற்போதே வெயில் அதிகமாக சுட்டெரித்து வருகிறது. காலையில் இருந்து மாலை வரை வெயில் அதிகமாக சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக காலை முதலே அதிகப்படியான வெப்பத்தால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. சாலையோரம் உள்ள குளிர்பானம், இளநீர், தர்பூசணிகளை மக்கள் அதிகம் தேடுகின்றனர். வாகன ஓட்டிகள் குறிப்பாக பெண்கள் முகத்தை துணியால் மூடியப்படி பயணிக்க தொடங்கிவிட்டனர்.
குறிப்பாக மதுரை, ஈரோடு, வேலூர், சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 6 மாவட்டங்களில் வெயில் 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது. அதிபட்சமாக கரூர் மாவட்டத்தில் 39.5 செல்சியஸ் (103.1 ஃபாரன்ஹீட் டிகிரி ) வெயில் பதிவாகி உள்ளது.
வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply