எங்கயோ போயிருச்சு காய்கறிகளின் விலை!! இஞ்சி ரூ.260, சாம்பார் வெங்காயம் ரூ.200, தக்காளி ரூ.100… ஷாக் மேல ஷாக்..!!

க்காளி விலையை தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலை ரூ. 60 உயர்ந்து, ரூ. 200-க்கு விற்கப்படுகிறது.

கடந்த 2 வாரங்களாக தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது.

கிலோ ரூ. 140 வரை விலை சென்றது. சென்னையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தக்காளி ரூ. 60-க்கு விற்பனை செய்யப்பட்டது. வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இநிந்லையில் டெல்லி உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ. 200 வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் சின்ன வெங்காயத்தின் விலை ஒரே நாளில் ரூ. 60 அதிகரித்துள்ளது. நேற்று மொத்த விற்பனையில் ரூ. 140-க்கு விற்பனை செய்யப்படிருந்த நிலையில், இன்று ரூ. 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி விலை கிலோவுக்கு ரூ.100 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இஞ்சி கிலோ ரூ.260க்கும், பூண்டு கிலோ ரூ.180க்கும் விற்பனை செய்யப்படுகிறது.