கோவை கரும்புக்கடை, புது காலனி, சாரமேடு பகுதியை சேர்ந்தவர் முகமது ஹரிஷ் ( வயது 25)நகைத் தொழில் செய்து வருகிறார்.இவர்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவஹருல்லா எம்எல்ஏ குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினாராம்.இதுகுறித்து தமு.மு .க ஐ.டி .பிரிவு செயலாளர் ஜாபர் அகமது கரும்புக்கடை போலீசில் புகார் செய்தார் .போலீசார் முகம்மது அரிஸ் மீதுவழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவர் மீதுஏற்கனவே போத்தனூர்,தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஆகிய காவல் நிலையத்தில் இது போன்ற வழக்குகள் உள்ளன .இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
த.மு.மு.க. எம்எல்ஏ ஜவஹிருல்லா குறித்து அவதூறு கருத்து பரப்பிய நபர் கைது..!
