கோவை துடியலூர் பக்கம் உள்ள பன்னிமடை ,சூர்யா கார்டனைச் சேர்ந்தவர் வரத குமார் (வயது 39 )இவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.துடியலூர் காமராஜர் காய்கறி மார்க்கெட்டுக்கு சாமான் வாங்க ஆட்டோவில் சென்றார். ஆட்டோவை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நிறுத்திவிட்டு காய்கறி வாங்க சென்றார், திரும்பி வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர்,இதுகுறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து பழனி பக்கமுள்ள கீரனூரை சேர்ந்த தாஜுதீன் (வயது 29) என்பவரை கைது செய்தனர். இவர் தற்போது பன்னிமடை, தாமு நகரில் தங்கியிருந்து வெங்காய வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் இருந்து ஆட்டோ மீட்கப்பட்டது.மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Leave a Reply