கோவை அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம் லிங்கன். கிறிஸ்தவ பாதிரியார். இவரது மகன் சாம்சுபர்கன் (வயது 19) இவர் நேற்று மதியம் சரவணம்பட்டி- விளாங்குறிச்சி ரோடு சந்திப்பில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிரைய்லர் லாரி இவரது பைக் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார்.இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வ போலீசில்புகார் செய்யப்பட்டது.போலீசார் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
Leave a Reply