தாயாரை அவதூறாக பேசியவரை அடித்துக் கொலை – தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை.!!

கோவை ரத்தினபுரி சாஸ்திரி ரோட்டை சேர்ந்தவர் செல்வம் ( வயது 34) கார் சீட் பொருத்தும் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார் .இவர் இரவில் காட்டூர் ரங்கே கோனார் வீதியில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் பாதுகாப்பு பணிக்காக செல்வது வழக்கம். கோவை வெனரட்டி ஹால் ரோடு சி.எம்.சி காலனியை சேர்ந்தவர் பால்ராஜ் ( வயது 32) தொழிலாளி .இவர் வீட்டில் தகராறு செய்துவிட்டு செல்வம் தூங்கும் மாநகராட்சி வணிக வளாகத்தில் இரவில் தங்குவது வழக்கம். அப்போது செல்வம் அவரிடம் மது மற்றும் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 20 20 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி பால்ராஜின் செல்போன் தொலைந்து விட்டது. அதை செல்வம் தான் திருடி இருக்க வேண்டும் என்று கருதி பால்ராஜ் கேட்டுள்ளார்: இதனால் ஆத்திரம் அடைந்து செல்வம் பால்ராஜின் தாயார் குறித்து அவதூறாக பேசினாராம். இதனால் ஆத்திரமடைந்த பால்ராஜ் அங்கு கடந்த இரும்புக்கம்பியை எடுத்து செல்வத்தை சரமரியாக தாக்கி உள்ளார் .இதில் படுகாயம் அடைந்து செல்வம் அதே இடத்தில் இறந்தார். இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பால்ராஜை கைது செய்தனர் .இந்த வழக்கு விசாரணை கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சசிரேகா குற்றம் சாட்டப்பட்ட பால்ராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார் .இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார்.