கோவையில் நாயை துப்பாக்கியால் சுட்டு கொன்றவர் கைது..!

கோவை பேரூர் அருகே உள்ள ராமச்செட்டிபாளையம், விசாகா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது45) கட்டுமான தொழிலாளி.அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 30 கோழிகள் மற்றும் 6 ஆடுகள் வளர்த்து வருகிறார். மேலும் ஆடுகளை அந்த பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலத்தில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம் .கடந்த 5-ந் தேதி தனது வீட்டை ஒட்டி இருந்த மேய்ச்சல் நிலத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது தெருவில் சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று ஆடுகளை துரத்தியது. இதனால் ஆடுகள் அங்கும் இங்கும் ஓட்டம் பிடித்தன. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால்நாயை நோக்கி சுட்டார். இதில் நாயின் உடலில் குண்டு பாய்ந்தது அதே இடத்தில் சுருண்டு விழுந்து செத்தது.நாயை வடிவேலு சுடுவதை அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண் பார்த்தார்.இது குறித்து அவர் பேரூர் போலீசில் புகார் செய்தார் .அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தார்கள். விசாரணையில் வடிவேலு துப்பாக்கியால் நாயை சுட்டுக் கொன்றது உறுதி செய்யப்பட்டது . இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து வடிவேலை போலீசார் நேற்று கைது செய்தனர். துப்பாக்கி (ஏர்கன்) பறிமுதல் செய்யப்பட்டது..