கோவை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றவரின் கால் துண்டிப்பு…

கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 57) இவர் நேற்று தனது உறவினர்களை வரவேற்க கோவை ரெயில் நிலையம் சென்றார். 1-வது பிளாட்பாரத்தில் உள்ள தண்டவாளத்தில் இறங்கி கடக்க முயன்றார். அப்போது எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த தண்டவாளத்தில் வந்தது.இதனால் பிளாட்பாரத்துக்கும் ரயிலுக்கும் இடையே மகேஷ் சிக்கினார்.இதில் அவரது வலது கால் துண்டிக்கப்பட்டது.ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரை ரயில்வே போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.