ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலினை முன்னிட்டு அதிமுக சார்பாக வேட்பாளர் அறிமுகக் கூட்டமானது எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஈரோட்டில் நடைபெற்றது.
இதில் பேசிய அவர், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசினை ஆதரித்து பேசிய அவர், ஈரோட்டில் ஏரிகள் தூர்வாரப்பட்டன. பல நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட்டன. ஒரு சொட்டு மழைநீரினைக்கூட வீணாக்காமல் பாதுகாத்த அரசு அம்மாவின் அரசு.
ஆனால் இந்த விடியா திமுக அரசு எந்தவித நலத்திட்டங்களையும் ஈரோட்டிற்கு செய்யவில்லை. மேலும் திமுகவின் அமைச்சர் ஒருவர் இந்த ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கு சேகரிக்காமல் நிதி சேகரித்து வருகிறார். நிதி சேகரித்தால் தான் அந்தக் கட்சியில் அவருக்கு இடம். ஆக நிதி சேகரித்து மக்களின் நலனில் அக்கறை செலுத்தாமல் இருப்பவர்கள்தான் திமுக அமைச்சர்கள். இன்றைக்கு கூட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஆனால் திமுகவினர் பொதுமக்களைத் திரட்டி ஆயிரம் ரூபாய் பணமும் பிரியாணியும் வழங்கி வருகிறார்கள். இதனை காவல்துறையினரும் தேர்தல் அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் திமுக மாவட்ட செயலாளர்கள் போல நடந்து கொள்கிறார்கள். மேலும் திமுகவினர் தங்களின் கட்சியைச் சேர்ந்த வேட்பாளரை களம் இறக்காமல், கூட்டணிக் கட்சியின் வேட்பாளரை போட்டியிட வைத்திருப்பது அவர்களின் தோல்வி பயத்தைக் காண்பிக்கிறது என்று எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
Leave a Reply