சென்னை அடுத்த ஆவடியை சேர்ந்த அமைச்சர் நாசரின் மகன் ஆசிம்ராஜா. சமீபத்தில் நடந்த திமுக நிர்வாகிகள் தேர்வின்போது, ஆவடி மாநகர செயலாளராக பதவி ஏற்றார்.
இந்த நிலையில், ஆசிம்ராஜா பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அவருக்கு பதிலாக திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த சன்.பிரகாஷ் என்பவர் நியமிக்கபட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில், தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக முதல்வரை வரவேற்க ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில், ஆவடி மாநகர செயலாளர் ஆசிம்ராஜா என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள், திமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளதாகவும், கட்சி தலைமையை எதிர்க்கும் விதமாகவே, ஆசிம்ராஜா இவ்வாறு போஸ்டர் ஒட்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply