சாலையின் குறுக்கே புகுந்த நாய்… பைக்கில் வந்தவர் பலி..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பக்கம் ஜடையம்பாளையம், தொட்ட பாவியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 39 ) இவர் நேற்று மேட்டுப்பாளையம் -ஊட்டி மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ரோஸ் கார்டன் ஸ்கூல் அருகே சென்ற போது திடீரென்று ரோட்டின் குறுக்கே ஒரு நாய் பாய்ந்தது. இதனால் பைக்கில் இருந்து நிலை தடுமாறி கிழே விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு சிகிச்சை அளித்தும் பலனிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது மனைவி பிரியங்கா மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்