கோவை: நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள முக்கூடலை சேர்ந்தவர் ஜார்ஜ் வில்லியம். இவரது மனைவி மல்லிகா இவர்களது மகன் பென்னிஸ் குமார் (வயது 24) இவர் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்து எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார் இந்த நிலையில் இவரது தாயார் மல்லிகா கடந்த 20 20 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.தாய் இறந்த துக்கத்தை பென்னி ஸ்குமாரால் மறக்க முடியவில்லை.இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டில் வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் அங்கிருந்தவர்கள் காப்பாற்றி விட்டனர் .இந்த நிலையில் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்த அவர் நேற்று காலை வழக்கம் போல வகுப்புக்கு சென்றார் .பின்னர் மதியம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு விடுதிக்கு வந்து விட்டார் . மாலையில் சக மாணவர்கள் வகுப்பு முடிந்து விடுதிக்கு வந்தபோது பென்னிஸ் குமார் தங்கி இருந்த அறையின் கதவு உட்பக்கம் பூட்டப்பட்டிருந்தது .உடனே அவர்கள் கதவை தட்டினார்கள் .ஆனால் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்தவர்கள் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தனர் .அப்போது மின்விசிறியில் பென்னிஸ் குமார் தூங்கில் தொங்கியது தெரியவந்தது. உடனே கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற மாணவர்கள் பென்னீஸ் குமாரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார் .இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் . தாய் இறந்த தூக்கம் தாங்க முடியாமல் பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply