துப்பாக்கி வாங்க வயது வரம்பு 21 ஆக உயர்வு… நியூயார்க் மாகாண கவர்னர் அதிரடி சட்டம்.!!

அமெரிக்காவில் சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் மாணவர்கள் 19 பேர், ஆசிரியர்கள் 2 பேர் என மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்து நியூயார்க் மாகாணம் பப்பலோ நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஒரு நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 பேர் உயிரிழந்தனர்.

இதனால் அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டிற்கான சட்டங்களை கடுமையாக்கும்படி அதிபர் ஜோ பைடன் சட்டக்குழுவிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் நியூயார்க் மாகாண கவர்னர் நியூயார்க்கில் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்தி சட்டம் இயற்றியுள்ளார். அதன்படி இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் துப்பாக்கி வாங்கலாம் என்றிருந்த நிலையில், இனி 21 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் துப்பாக்கி விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.