வால்பாறை அக்காமலை எஸ்டேட்டில் ஆயுத பூஜை கொண்டாட்டம்..!

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டப் பகுதிகளில் இன்று அனைத்து ஆலயங்களிலும் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது . அதேபோல தொழிற்சாலைகள்,நிறுவனங்கள், அலுவலகங்கள்,வணிக நிறுவனங்கள், வாகன பணிமனைகள் மற்றும் வாகனங்களுக்கும் ஆயூத பூஜை பக்திப் பரவசத்தோடு நடைபெறுகிறது . இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயக பெருமான் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்து அப்பகுதியில் தினந்தோறும் பயணிகளை ஏற்றிச் செல்லும் அரசு பேருந்துக்கும் சிறப்பான பூஜைகள் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுனர்களும் நடத்துனர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.