தமிழ்நாடு சட்டசபையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த திமுக ஆட்சியில் சட்டசபை தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதன் பிறகு நடந்த 17-வது சட்டசபை தேர்தலில் தவெக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதனை தொடர்ந்து தவெக அரசின் முதல் பட்ஜெட், சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கடந்த மாதம் 21-ம்தேதி அறிவித்திருந்தார்.
தவெக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதால் கடந்த சில நாட்களாக அனைத்து துறை அமைச்சர்கள், செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் துறைவாரியாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது 2026-27 ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.
இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அப்போது பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது உள்பட முக்கிய முடிவுகள் அந்த கூட்டத்தில் எடுக்கப்படும்.
பட்ஜெட் மீதான எம்எல்ஏக்களின் விவாதங்கள் 10-ம்தேதி நடைபெறும். அதன் நிறைவில் நிதி அமைச்சர் பதிலளித்து பேசுவார். அதன் பின்னர் இடைவெளி இல்லாமல் அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகளும் தாக்கலாகி, விவாதத்துக்கு விடப்படும் என்றும், எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 2-ம் வாரம் வரை நீடிக்கும் என்றும் தெரிகிறது.
நாளை வியாழக்கிழமை வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்க செய்ய உள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட இருந்ததால், கடந்த பிப்ரவரி மாதம் திமுக அரசு 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதன்படி, தமிழ்நாடு அரசுக்கான மொத்த வருவாய் 3 லட்சத்து 44 ஆயிரத்து 575 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. வருவாய்க்கான செலவு 3 லட்சத்து 93 ஆயிரத்து 272 கோடி ரூபாயாக இருக்கும் என்பதால், வருவாய்ப் பற்றாக்குறை 48 ஆயிரத்து 696 கோடி ரூபாயாக இருக்கும் என இடைக்கால நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்தது. பதவியேற்பு விழாவின் போதே, அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை குறித்து ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
அதற்கு ஏற்ப, கடந்த ஜூன் மாதம் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
தமிழ்நாடு அரசுக்கு 100 ரூபாய் வரவு எனில் 145 ரூபாய் செலவாவதாகவும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அனைத்திற்கு மேலாக, நலத்திட்டங்களுக்கு மட்டுமே ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அது மட்டுமின்றி, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் 13 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் என வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
2026-27-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட தவெக கொள்ளை தலைவர்களுக்கு வணக்கம் – நிதியமைச்சர் மரிய வில்சன்
3 மாதங்களில் ஏராளமான சாதனைகளை செய்துள்ளது விஜய் அரசு
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறளை குறிப்பிட்டு மரிய வில்சம் உரை
ஒவ்வொரு வீட்டிலும் அண்ணனாக, மகனாக வாழும் முதல்வர், மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துகிறார்.
அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்.
சமூகநீதி, சமத்துவம், வறுமை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு ஆகிய கோட்பாடுகளுடன் ஆட்சி நடக்கிறது.
முதல்வரின் ஆட்சியில் பல துறைகளில் கணிசமான முன்னேற்றங்கள் பிரதிபலிக்கின்றன.
உண்மையான சமூகநீதியை கொள்கையாக கொண்டது விஜய் அரசு.
சிங்கப்பெண் படை, 200 யூனிட் இலவச மின்சாரம், டாஸ்மாக் கடைகள் மூடல் என ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
வெற்றி தமிழகம் தொலைக்நோக்கு திட்ட அடிப்படையில் திட்டங்கள்.
தமிழக அரசின் கடன் ரூ.10 லட்சம் கோடியாக உள்ளது என்பது வெள்ளை அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டது.
மொத்த வரி வருவாயில் வட்டி அதிகரிப்பு- நிதி ஆதாரங்கள் குறைவாகவே உள்ளது- மரிய வில்சன்
மற்ற இணை மாநிலங்களை ஒப்பிடுகையில் வருவாய் பற்றாக்குறையில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது.
தவெகவின் வெற்றி ஒரு கட்சியின் தனிப்பட்ட வெற்றி அல்ல, தமிழக மக்களின் வெற்றி.
தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு டெண்டாகளில் கணிசமான தொகை தனிநபர்களுக்கு சென்றது.
டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை, தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரர்களும் பங்கேற்கலாம் என புதிய நடைமுறை.
இளைஞர்கள், சிறுதொழில் செய்வர்களுக்காக டெண்டர் விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
மக்களின் வரிப்பணத்தில் ஒரு பைசா கூட தொட மாட்டோம் தொட்டவர்களையும் விட மாட்டோம் என்பதில் முதலமைச்சர் உறுதி
முதலமைச்சர் விஜய் பெயரை கேட்டாலே ஊழல்வாதிகள் அஞ்சி ஓடி ஒளிகின்றனர்.
மதுபான உற்பத்தி ஆலைகளுக்கான கூடுதல் சிறப்பு கட்டணம்- ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரவு எதிர்பார்ப்பு
2036-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக்க திட்டம்.
கட்டடங்களுக்கு திட்ட அனுமதி பெறுவதில் ஊழல் முற்றிலும் அகற்றம்.
ரூ.139 கோடி மதிப்பீட்டில் 10,000 அரசுப்பள்ளிகளில் சூப்பர் கிளீன்- சூப்பர் கேம்பஸ் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது.
3734 பள்ளிகளை ரூ.2132 கோடியில் நவீனப்படுத்தும் திட்டம்.
பள்ளி பாடத் திட்டத்தை மறுசீரமைக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
9-12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா சீருடை, புத்தகம்- ரூ.122 கோடி
பதிவுத்துறை சீர்திருத்தம் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.15000 கோடி வருமானம்.
போதை பொருள் இல்லா தமிழ்நாடு- பள்ளிகளில் இருந்து துவங்க வேண்டும்.
பள்ளிகளில் போதை பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கீடு
போதை பொருள் இல்லா தமிழ்நாடு இயக்கத்திற்கு சிறப்பு APP
பெருந்தலைவர் காமராஜர் சிறப்பு பள்ளிகள் – ரூ.125 கோடி ஒதுக்கீடு
2026-27 நிதி ஆண்டில் பள்ளி கல்வித்துறைக்கு 44,527 கோடி ஒதுக்கீடு
38 மாவட்டங்களில் சென்ட்ரல் லைப்ரரி வசதிகள்- ரூ.10 கோடி ஒதுக்கீடு
பதிவுத்துறையில் செய்த சீர்திருத்தம் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.15000 கோடி வருவாய் கிடைக்கும்.
டெண்டர் தொகையின் பெரும் பகுதி குறிப்பிட்ட நபர்களுக்கு செல்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புகள்
பள்ளிகளில் போதைப்பொருள் தொடர்பான புகார்களுக்கு 10581 என்ற உதவி எண்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட், வாட்டர் பாட்டில் வைக்கும் வசதியுடன் ஸ்மார்ட் சைக்கிள்
5 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் சைக்கிள் திட்டத்திற்கு ரூ.277 கோடி
2026-27 நிதி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கீடு
கல்லுரிரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி திட்டத்திற்கு ரூ.2000 கோடி ஓதுக்கீடு
1 லட்சம் படுக்கை வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள்
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 277 கோடி ரூபாயில் நவீன சைக்கிள்கள் வழங்கப்படும்.
மதுரையில் 300 மாணாக்கர்கள் படிக்கும் வகையில் சிறப்பு சட்டக்கல்லூரி அமைக்கப்படும்.
தமிழக அரசின் பட்ஜெட்டில் உயர்கல்வித்துறைக்கு ரூ.8393 கோடி நிதி ஒதுக்கீடு
மின்சார வாகனங்கள், மின் கலன் பராமரிப்பு பயிற்சி – 22500 பேர் பயன்பெறும் வகையில் ரூ.3 கோடி ஒதுக்கீடு
12500 மெக்கானிக்குகளுக்க மின் வாகன மெக்கானிக் பயிற்சி – ரூ.3 கோடி ஒதுக்கீடு
தமிழக அரசு சார்பில் செயற்கை நுண்ணறிஹவ பாடத்திட்டம் வடிவமைக்கப்படும
5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி
ஐஐடி உள்ளிட்ட அமைப்புகள் உதவியுடன் 2031க்குள் 5 லட்சம் இளைஞர்களுக்கு AI பயிற்சி
Robotics கல்வி – 6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு AI பாடத்திட்டம்
தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.2022 கோடி- சிறப்பு திட்ட செயலாக்கத்திற்கு ரூ.17,150 கோடி ஒதுக்கீடு
தொழில்முனைவு ஆர்வத்தை மேம்படுத்த வெற்றித்திறன் பயிற்சி திட்டம் – ரூ.150 கோடி ஒதுக்கீடு
தேசிய, சர்வதேச போட்டிகளில் வெல்லும் 500 வீரர்களுக்கு நிதி உதவி வழங்க ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு
பள்ளி நேரத்திற்கு பிறகு தினமும் 1 மணிநேரம் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கு ஒதுக்கீடு
பொறியில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2032க்குள் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.1051 கோடி ஒதுக்கீடு
விளையாட்டில் ஆர்வமும் திறமையும் கொண்ட 8-18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு
கிராம விளையாட்டு போட்டிகள் நடத்த ரூ.42 கோடி ஒருக்கீடு
வெற்றி தொழில் முனைவோர் திட்டம் – ரூ.75 கோடி ஒதுக்கீடு
அனைத்து ஒன்றிய, நகராட்சிகளில் Sports complex
2026-27 பட்ஜெட்டில் இளைஞர் நலன், விளையாட்டு துறைக்கு ரூ.1,051 கோடி நிதி ஒதுக்கீடு
பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல, கிராமிய விளையாட்டு போட்டிகள் நடத்த ரூ.42 கோடி ஒதுக்கீடு
தொழில்முனைவு ஆர்வத்தை மேம்படுத்த வெற்றி திறன் பயிற்சி திட்டம் – ரூ.150 கோடி ஒதுக்கீடு
7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கல்வி கட்டணத்திற்கு ரூ.462.41 கோடி நிதி ஒதுக்கீடு
ஹஜ் மானியம் – ரூ.25,000ல் இருந்து ரூ,35,000 ஆக உயர்வு
சமூக நீதித்துறைக்கு ரூ.3,937 கோடி ஒதுக்கீடு
கபர்ஸ்தான்கள் மற்றும் கல்லறை மேம்பாட்டிற்கு ரூ.34 கோடி ஒதுக்கீடு
கிறிஸ்துவ மற்றும் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு ரூ.1.05 கோடி ஒதுக்கீடு
திருமணமாகும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை அண்ணனின் சீர் வரிசை திட்டடத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு
BC, MBC மற்றும் சிறுபான்மை நலத்துறை – ரூ.17000 கோடி ஒதுக்கீடு
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை – ரூ.1458 கோடி ஒதுக்கீடு
மூத்தகுடிமக்கள் பாதுகாப்பு இல்லம் – ரூ.6.6 கோடி ஒதுக்கீடு
மூத்த குடிமக்களுக்கு முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் பொழுதுபோக்கு மையம்.
500 அங்கன்வாடிகளுக்கு புதிய கட்டிடங்கள்
காமராஜர் காலை உணவுத்திட்டம் – 15,414 பள்ளிகளில் 15.14 லட்சம் மாணவர்கள் கூடுதலாக பயன்பெறுவர்.
காமராஜர் காலை உணவுத்திட்டம் – 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம்
திருநங்கைகள் தங்குவதற்கு 5 மாவட்டங்களில் அரண் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்திற்கு ரூ.165 கோடி ஒதுக்கீடு
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்- அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்
நடப்பு நிதி ஆண்டில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு
அரசு மருத்துவமனை பிரசவங்களை ஊக்குவிக்க தாய்மாமன் தங்க மோதிர திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சமூக நலத்துறைக்கு ரூ.9818 கோடி ஒதுக்கீடு
முதலமைச்சர் தாய் கேர் திட்டம் – ரூ.23 கோடி ஒதுக்கீடு
மூத்த குடிமக்களுக்காக 1000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் திட்டம்- ரூ.கோடி நிதி ஒதுக்கீடு
5 மண்டலங்களில் புற்றுநோய் பராமரிப்பு மையங்கள் – திட்ட அறிக்கைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு
சுகாதாரத்துறைக்கு ரூ.23,357 கோடி ஒதுக்கீடு
மகப்பேறு நாள் நெருங்கும் போது தங்கி இருந்து பயன்பெறும் வகையில் தாய் கேர் திட்டம் – ரூ.23 கோடி ஒதுக்கீடு
கூட்டுறவு துறைக்கு ரூ.8028 கோடி ஒதுக்கீடு
ரூ.5932 கோடியில் பயிர் கடன் தள்ளுபடி செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மையம் கிளை தொலை மருத்துவ வலையமைப்பு – ரூ.33 கோடி ஒதுக்கீடு
விவசாயிகளுக்கான மின் மானித்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு
வேளாண் துறைக்கு ரூ.14984 கோடி நிதி ஒதுக்கீடு
வெற்றி ஆடு வளர்ப்பு திட்டம் – 30 ஆயிரம் பெண்களுக்கு 5 ஆடுகள்
வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம் – ரூ.110 கோடி ஒதுக்கீடுரூ.5932 கோடியில் பயிர் கடன் தள்ளுபடி செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மையம் கிளை தொலை மருத்துவ வலையமைப்பு – ரூ.33 கோடி ஒதுக்கீடு
விவசாயிகளுக்கான மின் மானித்திற்கு ரூ.7,432 கோடி ஒதுக்கீடு
வேளாண் துறைக்கு ரூ.14984 கோடி நிதி ஒதுக்கீடு
வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம் – ரூ.110 கோடி ஒதுக்கீடு
தரமான தீவன திட்டம் – ரூ.6.7 கோடி ஒதுக்கீடு
காவிரி டெல்டா குறுவை சாகுபடி தொகுப்பு – ரூ.134 கோடி ஒதுக்கீடு
பணியில்லா கால மீனவர் உதவித்தொகை – ரூ.7000 ஆக உயர்வு
கால்நடை மருத்துவமனைகளை தரம் உயர்த்த ரூ.40 கோடி
கால்நடைகள் காப்போம் திட்டம் – ரூ.31 கோடி, ஆழ்கடல் மீன்பிடித் தொழில் ஊக்குவிப்பு – ரூ.12 கோடி ஒதுக்கீடு
10 ஆயிரம் பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் – ரூ.59 கோடி ஒதுக்கீடு
கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை- ரூ.4880 கோடி ஒதுக்கீடு
1.93 லட்சம் மீனவர்கள் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மீன்பிடி தடைக்கால நிதி ரூ.135 கோடி ஒதுக்கீடு
வெளிநாடு வார் தமிழர் முதலீட்டு சேவை அமைப்பு உருவாக்கப்படும்.
பின்தங்கிய மாவட்டங்களில் ரூ.3200 கோடியில் புதிய சிப்காட் தொழில் பூங்காங்கள் உருவாக்கப்படும.
ரூ.3200 கோடி செலவில் புதிய சிப்காட் பூங்காக்கள்
தூத்துக்குடி, நெல்லையில்- விண்வெளி முதலீட்டு மண்டலங்கள்
தமிழ்நாட்டில் இந்தியாவின் முதல் AI நகரம் அறிவகம்- ரூ. 5 கோடி ஒதுக்கீடு
குறுசிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் – ரூ.352 கோடி மானியம்
தமிழ்நாடு வடிவமைப்பு நிறுவனம் – ரூ.60 கோடி
தமிழ்நாடு பனை மேம்பாடு கழகம் அமைக்கப்படும்-ரூ.16 கோடி ஒதுக்கீடு
பசுமை எஃகு உற்பத்தி முன் முயற்சி – ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு
சுற்றுச்சுழலுக்கு உகந்த பசுமை ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்க திருப்பூர் – டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் – 10 கோடி நிதி ஒதுக்கீடு
சிறுகுறு நடுத்தர தொழில்துறைக்கு ரூ.2142 கோடி ஒதுக்கீடு
கைத்தறி, கைத்திறன், துணிநூல், கதர் துறைக்கு ரூ.1678 கோடி நிதி ஒதுக்கீடு
டிஜிட்டல் சேவை துறைக்கு ரூ.398 கோடி ஒதுக்கீடு
2040 மெகாவாட் கூடுதல் உற்பத்தி- புதிய மின்திட்டங்கள்
வீட்டுக்கூரை சூரிய மின் திட்டம்- ரூ.1 லட்சம் வரை மானியம்
வீட்டுக்கூரை சூரிய மின் திட்டம் மானியம் ரூ.50 கோடி ஒதுக்கீடு
இ-சேவை 2.0 திட்டம் வாட்ஸ் அப் CHATBOT சேவைகள் 275 ஆக விரிவாக்கம்
மாநிலத்தின் பிற பகுதிகளில் 50 லட்சம் தொழில்- வணிக நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மின் மீட்டர் சேவை
ரூ.5050 கோடியில் வெள்ளிமலை நீரேற்று புனல்- மின்திட்டம் விரைவுபடுத்தப்படும்.
சென்னை மற்றும் புறநகர் மின்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.1390 கோடி ஒதுக்கீடு
178 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்க ரூ.1543 கோடி ஒதுக்கீடு
கோவை முதல் அரியலூர் வரை 765 கே.வி மின் பகிர்மான பாதை- ரூ.4000 கோடி ஒதுக்கீடு
5 வருடங்களில் 2000 பொது EV சார்ஜிங் நிலையங்கள்- ரூ.50 கோடி
சென்னை மாநகரில் அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டரில் நவீன மின்சார சேவை
குடியிருப்புகளில் EV சார்ஜிங் நிலையங்கள் மானியம் – ரூ.5 கோடி ஒதுக்கீடு
5604 சதுர கிமீ பரப்பளல் உலகத்தரத்தில் சென்னை- சாத்தியங்களை ஆராய ரூ.25 கோடி ஒதுக்கீடு
AI தொழில்நுட்பத்துடன் திட்ட அனுமதி வழங்க ரூ.40 கோடி ஒதுக்கீடு
கோவை- அரியலூர் 765 KV மின் பகிர்மான பாதை திட்டம்- ரூ.4000 கோடியில் செயல்படுத்தப்படும்.
அனைவருக்கும் தரமான வீடு- ரூ.1253 கோடி ஒதுக்கீடு
ரூ.1543 கோடியில் 178 புதிய துணை மின் நிலையங்கள், ரூ.2000 கோடியில் பழைய மின்மாற்றிகள் மாற்றம்
உலகத்தரத்தில் உருவாகும் சென்னை- நீண்ட கால வளர்ச்சி மாற்றத்திற்கான வரைபட திட்டமிடலுக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு
கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்த வலியுறுத்தப்படும்
மாநிலத்திற்குள் உள்ள நதிகளை இணைக்கும் திட்டம்- ரூ.200 கோடி ஒதுக்கீடு
நதிகள் மீட்பு-தாமிரபரணி, வைகை, காவிரி மறுசீரமைப்பு சாத்தியக்கூறு ஆய்வுக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு
அம்பத்தூர், கிண்டி தொழிற்பேட்டை சாலைகள் மறுவடிவமைப்பு
5604 சதுர கிமீ பரப்பளவில் உலகத்தரத்தில் சென்னை- சாத்தியங்களை ஆராய ரூ.25 கோடி ஒதுக்கீடு
வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி துறைக்கு ரூ.8850 கோடி நிதி ஒதுக்கீடு
முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாடு திட்டம்- ரூ.2117 கோடி ஒதுக்கீடு
கூவம், அடையாறு நதிகளை தூய்மையாக்க சர்வதேச அளவில் டெண்டர்
சென்னை கூவம், அடையாறு நதிகளில் படகு சவாரி
சென்னை குடிநீருக்கு முதன்மை சுற்றுக்குழாய் திட்டம்- ரூ.3108 கோடி ஒதுக்கீடு
2030-31க்குள் சென்னை முழுவதும் சமமான, தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய இலக்கு
சென்னையில் 20 இடங்களில் திறன்மிகு வாகன நிறுத்துமிடம்
MY HOME திட்டம் சென்னை பெருநகத்தில் அறிமுகம் PPP முறையில் ரூ.15,0000 கோடி ஒதுக்கீடு
எரிசக்தி துறைக்கு ரூ.15,828 ஒதுக்கீடு
நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.21,524 கோடி நிதி ஒதுக்கீடு
ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்- ரூ.9300 கோடி ஒதுக்கீடு
போக்குவரத்து துறைக்கு ரூ. 13561 கோடி ஒதுக்கீடு
வீட்டுவசதி- நகர்ப்புற வளர்ச்சிக்கு ரூ.8852 கோடி ஒதுக்கீடு
முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுதிட்டம் – ரூ.2117 கோடி ஒதுக்கீடு
ஆவடி- பட்டாபிராம் இடையே மெட்ரொ ரயில் திட்டத்திற்கு பரிந்துரை
ஸ்ரீபெரும்புதூர்-சுங்வார்சத்திரம் இடையே மெட்ரோ ரயில் திட்டத்திற்க பரிந்துரை
விமான நிலையம்- கிளாம்பாக்கம், கோயம்பேடு-பட்டாபிராம், பூந்தமல்லி- சுங்குவார்சத்திரம் வரை மெட்ரோ ரயில் சேவை
கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்த வலியுறுத்தப்படும்
நீர்வளத்துறைக்கு – ரூ.9264 கோடி ஒதுக்கீடு
மாநிலத்திற்குள் உள்ள நதிகளை இணைக்கும் திட்டம்- ரூ.200 கோடி ஒதுக்கீடு
காவிரி-வைகை-குண்டாறு நதி நீர் இணைப்பு திட்டம்- ரூ.150 கோடி ஒதுக்கீடு
காவிரி மற்றும் கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைகள்- சாத்தியக் கூறு ஆய்வுக்கு ரூ.10 கோடி
மனித – விலக்கு மோதலை தடுக்க 100 கிராமங்களில் சூரிய மின்வேலி, எஃகு வேலி அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு
சுற்றுச்சூழல் துறைக்கு ரூ.1762 கோடி ஒதுக்கீடு
கான்கிரீட் வீடுகள் கட்ட இதுவரை அரசு ரூ.3.10 லட்சம் கொடுத்த நிலையில் தற்போது ரூ.5 லட்சமாக உயர்வு என அறிவிப்பு
நடப்பு ஆண்டில் ரூ.3500 கோடியில் 70 ஆயிரம் கான்கிரீட் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.
வெற்றி வீடு திட்டம்- நடப்பு ஆண்டில் ரூ.3500 கோடியில் 70,000 கான்கிரீட் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.
மலைப்பகுதி ஊராட்சிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு
‘வெற்றி 150’ என்ற முன் முயற்சி- 150 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கப்படும்- ரூ.100 கோடி ஒதுக்கீடு
TN VETRUI திட்டம்- நகர்புறங்களை ஒட்டிய கிராமங்களுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் 125 நாள் வேலையுடன் கூடுதலாக 25 நாள் வேலை
சுய உதவி குழுக்களுக்கு இந்த ஆண்டு ரூ.38,000 வங்கி கடன் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயம்
பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம்
தரமான பொது விநியோகம் திட்டம்- ரேசன் கடைகளில் பாக்கெட் கோதுமை மாவு வழங்கும் திட்டம் – ரூ.18 கோடி ஒதுக்கீடு
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படைக்கு ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடு
சிங்கபெண்கள் வலிமையப்படுத்தும் திட்டம்- பெண்ள் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம்
மகளிர் சுய உதவிக்குழு – ரூ.38000 கோடி கடன இலக்கு
உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு ரூ.14,830 கோடி நிதி ஒதுக்கீடு
போதையில்லா தமிழகம்- போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைக்கு ரூ.70 கோடி ஒதுக்கீடு
முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதிக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு
சாலை பாதுகாப்பு பணிக்கு ரூ.130 கோடி ஒதுக்கீடு
கடலோர மாவட்டங்களில் 2500 ஹெக்டேரில் புதிய அலையாத்தி காடுகள் உருவாக்க ரூ.40 கோடி ஒதுக்கீடு
ரூ.431 கோடியில் கட்டப்படும் புதிய குடியிருப்புகள்- மூலம் 5000 காவலர் குடும்பங்கள் பயன்பெறும்.
உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கு ரூ.17,290 கோடி நிதி ஒதுக்கீடு
வருவாய் பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ.11,532 கோடி ஒதுக்கீடு
சூப்பர் எல் நினோ பாதிப்பை சமாளிக்க சிறப்பு நடவடிக்கைகள்- ரூ.340 கோடி ஒதுக்கீடு
வணிக வரித்துறைக்கு ரூ.651 கோடி, முத்திரைத்தாள், பதிவுத்துறைக்கு ரூ.475 கோடி ஒதுக்கீடு
ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஒய்வுகால நன்மைகளுக்கு ரூ.47,240 கோடி நிதி ஒதுக்கீடு
உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கு ரூ.17,290 கோடி நிதி ஒதுக்கீடு
காவலன் நலன்- காவல்துறையினருக்கு புதிய குடியிருப்பு வளாகங்கள் கட்டுவதற்கு ரூ.431 கோடி நிதி ஒதுக்கீடு
ரூ.1375 கோடியில் சென்னை பிராட்வேயில் 160 நீதிமன்றங்களுடன் ஒருங்கிணைந்த உலகத் தர நீதிமன்ற வளாகம்
உணவுத்திருவிழாக்கள் நடத்த ரூ. 20 கோடி ஒதுக்கீடு
2026-27 நிதி ஆண்டில் நீதி நிர்வாக துறைக்கு ரூ.2,486 கோடி நிதி ஒதுக்கீடு
ஒகேனக்கல் காவிரி, மதுரை வைகை, பாபநாசம் தாமிரபரணி நதி சுற்றுலா
ஆன்மிக தலங்களில் ரூ.60 கோடியில் ஓய்வு இல்லங்கள்
மூத்த குடிமக்களுக்கு புனித பயணம் திட்டம்- 2.5 லட்சம் பேர் பயன்பெறும்
300 திருக்குறள்களை மனப்பாடம் செய்து சொல்லும் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை
தொடக்கப்பள்ளி மாணவர்கள் 500 பேருக்கு ரூ.5000 ஊக்கத்தொகை
சுற்றுலா, கலை பண்பாட்டுத்துறைக்கு- ரூ.775 கோடி ஒதுக்கீடு
சென்னையில் 1000 புதிய ஏசி மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.
நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.23 கோடி ஒதுக்கீடுவருவாய் பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ.11,532 கோடி ஒதுக்கீடு
வணிக வரித்துறைக்கு ரூ.651 கோடி, முத்திரைத்தாள், பதிவுத்துறைக்கு ரூ.475 கோடி ஒதுக்கீடு
ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஒய்வுகால நன்மைகளுக்கு ரூ.47,240 கோடி நிதி ஒதுக்கீடு
உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைக்கு ரூ.17,290 கோடி நிதி ஒதுக்கீடு
உணவுத்திருவிழாக்கள் நடத்த ரூ. 20 கோடி ஒதுக்கீடு
ஒகேனக்கல் காவிரி, மதுரை வைகை, பாபநாசம் தாமிரபரணி நதி சுற்றுலா
ஆன்மிக தலங்களில் ரூ.60 கோடியில் ஓய்வு இல்லங்கள்
மூத்த குடிமக்களுக்கு புனித பயணம் திட்டம்- 2.5 லட்சம் பேர் பயன்பெறும்
தொடக்கப்பள்ளி மாணவர்கள் 500 பேருக்கு ரூ.5000 ஊக்கத்தொகை
சுற்றுலா, கலை பண்பாட்டுத்துறைக்கு- ரூ.775 கோடி ஒதுக்கீடு
சென்னையில் 1000 புதிய ஏசி மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.
நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.23 கோடி ஒதுக்கீடு
1000 ஆண்டுகள் பழமையான 213 கோவில்கள் புனரமைக்கப்படும்
இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.708 கோடி ஒதுக்கீடு
கோவில் சொத்துக்களை பாதுகாக்க தனி கவனம் செலுத்தப்படும்.
3000 கோவில்களில் 5 ஆண்டுகளில் திருப்பணி, குடமுழுக்கு செய்யப்படும்
தமிழ்நாட்டில் நிதி நிலையை சீராக்கவும் 2 வருடங்கள் தேவை
ஒப்பந்தங்களில் கசிவுகளை தடுத்து ரூ.1500 கோடி வருவாயை உருவாக்க அரசு திட்டம்
நிதி ஆதாரம் இல்லையென்றால் நலத்திட்ட உதவிகள் சாத்தியம் இல்லை
உண்மையான நலத்திட்ட பயனாளிகள அடையாளம் காண உள்ளோம்.
அரசு நலத்திட்ட பயனாளிகளை மறு ஆய்வு செய்ய உள்ளோம்.
மான்டேக் சிங் அலுவாலியா குழுவினர் உண்மையான பயனாளிகளை நேர்மையாக ஆய்வு செய்வார்கள்.
திருத்தப்பட்ட பட்ஜெட்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2.54 லட்சம் கோடியாக உள்ளது.
2026-27 மொத்த பட்ஜெட் – ரூ.350027 கோடி
வருவாய் பற்றாக்குறை – ரூ.55,775 கோடி








